| ADDED : ஆக 07, 2024 05:30 AM
புதுச்சேரி : கேள்வி எழுப்பியதால் சட்டசபையில் உள்ளேன். கேள்வி கேட்காதவர்கள் சபைக்கு வெளியே உள்ளனர் என, கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசினார்.புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதம் வருமாறு; கல்யாணசுந்தரம்: கருவடிக்குப்பம் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், ஏ.பி.சி., கேபிள் அமைக்க வேண்டும்.நேரு: என் தொகுதியில் ஏ.பி.சி. கேபிள் அமைக்க டெண்டர் எடுத்த நபரை 6 மாதமாக காணவில்லை.கல்யாணசுந்தரம்: மின்துறையில் ஆட்கள் இருந்தாலும், வேலை செய்வதில் சுணக்கம் காட்டுகின்றனர்.நேரு: அனைத்து தொகுதிக்கும் லேடர் ஒன்று வாங்கி கொடுங்கள். லேடர் இல்லை என, மின் கம்பத்தில் ஏற மறுக்கின்றனர்.நமச்சிவாயம்: உறுப்பினர் கூறும் குறைகள் உடனடியாக சரிசெய்ய ஆவணம் செய்யப்படும்.கல்யாணசுந்தரம்: கடந்த காங்., ஆட்சியில் தலைமை செயலகம் எதிரில் கருங்கல் கொட்டி கடற்கரையை உருவாக்கியதால், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் கொண்டு வரும்போது பக்கவிளைவுகளை பற்றி சிந்திக்க வேண்டும். கடந்தமுறை நால்வர் அணியாக இருந்தவர், தற்போது 6 பேர் அணியாக உள்ளார் என என்னை கூறினர். கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியில் கேள்வி எழுப்பியதால் இந்த சபையில் உள்ளேன். கேள்வி கேட்காதவர்கள் சட்டசபைக்கு வெளியே உள்ளனர். பி.ஆர்.சிவா: கேள்வி கேட்பது வேறு, பதவி கேட்பது வேறு.சபாநாயகர் செல்வம்: தனி நபர் விமர்சனம் வேண்டாம் என தெரிவித்ததைத் தொடர்ந்து சபை அமைதியானது.