உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் புகார்

தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தம்; எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் புகார்

பாகூர் : பாகூரில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்திட வேண்டும் என, அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பாகூர் பொது மக்கள், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமாரிடம் அளித்துள்ள மனு; பாகூரில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சிவன் கோவில் எதிரே பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. சிறுவர்கள் பைக்குகளில் வேகமாக ஓட்டி சென்று சாகசம் செய்து விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்றனர்.புதுப்பிக்கப்பட்டுள்ள சாலைகளின் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளின் மீது வெள்ளை வண்ணம் பூசப்படாமல் இருப்பதாலும், சாலைகளில் பாதுகாப்பு குறியீடுகள் இல்லாததால், பொது மக்கள் தினமும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, பாகூரில் போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளை சரி செய்திட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி