உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் என்.சி.சி., மாணவர்கள் கடல் சாகச பயணம் துவக்கம்

புதுச்சேரியில் என்.சி.சி., மாணவர்கள் கடல் சாகச பயணம் துவக்கம்

புதுச்சேரி : என்.சி.சி. மாணவர்களின் கடல் சாகச பயணம் துவக்க விழா நேற்று நடந்தது.புதுச்சேரி என்.சி.சி., தலைமையகம் சார்பில், ஆண்டு தோறும், கடற்படை பிரிவு மாணவர்கள், பாய்மர படகு மூலம் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து காரைக்கால் வரை கடல் சாகச பயணம் செல்வது வழக்கம்.இந்தாண்டு சமுத்ர சக்தி என்ற பெயரில் பாய்மர படகு கடல் சாகச பயண துவக்க விழா தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நேற்று நடந்தது. என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர் கர்னல் மேனன் தலைமை தாங்கினார். பாஸ்கர் எம்.எல்.ஏ., கொடி அசைத்து கடல் சாகச பயணத்தை துவக்கி வைத்தார்.இதில் 3 என்.சி.சி., கடற்படை பிரிவு அதிகாரிகள், 2 இணை என்.சி.சி., அதிகாரிகள், 11 கடற்படை பிரிவு ஊழியர்கள் மற்றும் 35 மாணவர்கள், 25 மாணவிகள் என பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் பாய்மர படகு மூலம் கடலுார், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்று மீண்டும் அதே வழியாக 302 கி.மீ., பயணம் செய்து, வரும் 17ம் தேதி புதுச்சேரி திரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்