மகாகவி தமிழ் இலக்கிய மன்றம் துவக்கம்
திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாகவி தமிழ் இலக்கிய மன்றம் துவக்க விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவத் தலைவர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். வேல்முருகன் மகாகவி தமிழ் இலக்கிய மன்ற பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன், முன்னாள் ராணுவ வீரர் ஆளவந்தார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.ஆசிரியை சங்கரி நோக்கவுரையாற்றினார். ஆசிரியை பூவிழி தொகுத்து வழங்கினார். மாணவர்கள் கவிதை, பாடல், பேச்சு உள்ளிட்டவை மூலம் தங்களது தனிதிறனை வெளிப்படுத்தினர்.ஆசிரியை பார்வதி நன்றி கூறினார்.