உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுச்சாவடி பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

ஓட்டுச்சாவடி பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி : ஓட்டுச்சாவடிகளில்பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தல் வரும் 19 ம்தேதி நடக்கிறது. புதுச்சேரி பிராந்தியத்தில் 739 ஓட்டுச்சாவடிகள், காரைக்கால்-164, மாகி பிராந்தியத்தில் - 3, ஏனாம்-33, என மொத்தம் 967 ஓட்டுச்சாவடிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளன.புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 739 ஓட்டுசாவடிகளில் பணிபுரிபவர்களைத் தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 17ம் தேதி முதற்கட்ட தற்செயல் கலப்பு முறையில் நடந்தது. கடந்த மாதம் 31ம் தேதி இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறையில் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட ஓட்டு அதிகாரிகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 8 உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கீழ் 16 மையங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பயிற்சி நடக்கும் குருமாம்பட்டு ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆய்வு செய்தார். தெற்கு சப் கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் கொட்டாரு உடனிருந்தார்.தொடர்ந்து முள்ளோடை பகுதிக்குச் சென்று மாவட்ட தேர்தல் அதிகாரி, அங்குள்ள சோதனைச்சாவடியை ஆய்வு செய்தார். பாகூர், அரியாங்குப்பம், நல்லவாடு, கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் மற்றும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ