மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
திருக்கனுார் : புதுச்சேரியில் போலீஸ் ஊர்காவல் படை வீரர்கள் 500 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 30ம் தேதி நடந்தது. இதற்கான, முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.மண்ணாடிப்பட்டு தொகுதி செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோபி, சந்தோஷ், பரதன், ராஜகுமார் மற்றும் பவதாரணி உள்ளிட்ட 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், போலீஸ் பணியிடங்களில் அதிகம் பேர் பணியாற்றும் கிராமம் என்ற பெயரை செட்டிப்பட்டு மீண்டும் பெற்றுள்ளது.இங்கு, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு போலீசார், ஐ.ஆர்.பி.என்., தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.இதேபோல், திருக்கனுாரைச் சேர்ந்த ரமணா, தினேஷ், மணலிப்பட்டைச் சேர்ந்த மணிகண்டன், முரளிதரன், கூனிச்சம்பட்டைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, ஷாம்குமார், பாரத், மண்ணாடிப்பட்டை சேர்ந்த கவுதம், கைக்கிலப்பட்டை சேர்ந்த ஏழுமுருகா உள்ளிட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற இளைஞர்களை திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர், நேற்று போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினர்.திருக்கனுாரில் தேர்ச்சி பெற்றுள்ள ரமணா, புதுச்சேரி அளவில் 86.50 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago