உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கம்பளிசாமி மடத்தில் சர்வதேச யோகா தின விழா

கம்பளிசாமி மடத்தில் சர்வதேச யோகா தின விழா

புதுச்சேரி : புதுச்சேரி, தட்டாஞ்சாவடியில் உள்ள கம்பளிசாமி மடத்தில், 10வது சர்வதேச யோகா தின விழா நடந்தது. இதில், அகில உலக யோகா கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், ஆனந்த ஆசிரமம், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் ரிக் ஷா மாமா பவுண்டேஷன், யோகாஞ்சலி நாட்டியாலாயம், கீதாஞ்சலி யோகா சென்டர், விவேகானந்தா யோகாசென்டர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.சித்தர் பூமி யோகாசன தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி, யோகசான செயல்முறை தொகுத்து வழங்கினார். 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெரியவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். தொடர்ந்து, சங்க தலைவர் ஆனந்த் பாலயோகி பவனானி யோகா ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளும், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்க துணை தலைவர் தேவசேனா பவனானி, சங்க செயலாளர் தயாநிதி, சங்க பொருளாளர் சண்முகம், மூத்த துணை தலைவர் கஜேந்திரன், சங்க துணை செயலாளர் பாலாஜி, சங்க உறுப்பினர்கள் லலிதா சண்முகம், செந்தில்குமார், அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ