உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

கோரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

புதுச்சேரி : கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஊழியர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.ஒவ்வொரு ஆண்டும், ஜூன்., 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. சுய மற்றும் சமூகத்திற்கான யோகா என்பது இந்தாண்டிற்கான கருப்பொருள். இது யோகா பயிற்சியின் இரட்டை நன்மைகளை வலியுறுத்துகிறது.அதாவது, தனிப்பட்ட நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தை மேம்படுத்துதல். யோகா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த, மன அழுத்தத்தைக் குறைக்க மற்றும் சுய விழிப்புணர்வை வளர்க்கும் திறன்களை வழங்குகிறது.இந்த நிலையில், கோரிமேடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில், சர்வதேச யோகா தினம், நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார உதவியாளர் சிவக்குமார் வரவேற்றார். செவிலிய அதிகாரிகள் சாந்தி, நிர்மலா மற்றும் பெண் சுகாதார மேற்பார்வையாளர் வாசுகி முன்னிலை வகித்தனர்.நிலைய பொறுப்பு மருத்துவ அதிகாரி சித்ரா மற்றும் ஹோமியோ டாக்டர் அருணாச்சலம் தலைமை தாங்கினர். யோகா ஆசிரியை ராதிகா, சிறப்புரையாற்றி, அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் அடிப்படை யோகா நிலைகளை பயிற்றுவித்தார். நிறைவாக சுகாதார உதவியாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்