உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா விழா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா விழா

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய தகவல் தொடர்பு பணியகம் சார்பில், 10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.விளையாட்டு பிரிவு இயக்குனர் இளையராஜா வரவேற்றார். புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக் கரசு சிறப்புரையாற்றி பேசும் போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகா உதவு கிறது. அனைவரும் யோகா செய்ய முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார்.ஆசிரியர்கள், ஊழியர் கள், மாணவர்கள் 300 பேர் கலந்து கொண்டனர். கலாசார பண்பாட்டு உறவுகள் இயக்குனர் கிளமென்ட் லுார்து வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒருங்கிணைத்து இருந்தது. விளையாட்டு துறை இணை இயக்குனர் பிரவீன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்