| ADDED : ஏப் 09, 2024 05:05 AM
தொகுதி மக்களிடம் அன்பழகன் கேள்விபுதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அக்கட்சியின் செயலாளர் அன்பழகன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:தேர்தலில் நமச்சிவாயம் விருப்பம் இன்றி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில்நமச்சிவாயம்வெற்றிக்காக பாடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அவரை சந்தித்து வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், நமச்சிவாயம் டில்லி சென்று விடுவார்.கடந்த தேர்தலில் அவருக்காக உழைத்தவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். இதை உணர்ந்து நமச்சிவாயத்திற்கு வாக்களித்து, உங்களை நீங்களே அழித்து கொள்ளாதீர்கள்.நமச்சிவாயத்திற்கு ஓட்டு போட்டால் தொகுதி மக்கள் கஷ்டப்படுவீர்கள். ஏனென்றால், இடைத் தேர்தல் வருவதற்கு ஓராண்டாகி விடும். எம்.எல்.ஏ., இல்லாமல் இந்த தொகுதி மக்கள் கஷ்டப்படும் சூழல் ஏற்படும். எனவே, இந்த தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் அவசியமா என யோசித்து அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு அளியுங்கள்.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அரசு கொண்ட வரவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படாமல் உள்ளது.கஞ்சா கடத்தும் மாநிலமாக புதுச்சேரி மாறி வருகிறது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. பா.ஜ., வெற்றி பெற்றால் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஆட்சி மாற்றத்தை பா.ஜ., கொண்டு வரும்.ஐந்து வருடம் எம்.பி.,யாக இருந்த வைத்திலிங்கம், தனது நிதியை முழுமையாக செலவிடாமல் 25 சதவீதம் நிதியை திருப்பி ஒப்படைத்தவர். வரும் 2026 தேர்தலில் இத்தொகுதியில் மகாதேவி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.இவ்வாறு, அவர் பேசினார்.