உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலிடெக் னிக், ஐ.டி.ஐ., மாணவ - மாணவியருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.புதுச்சேரி, மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லுாரி, லெனோவா இந்தியா மற்றும் இந்தியா அறக்கட்டளை இணைந்து, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தது.இதையொட்டி, சான்றிதழ் வழங்கும் விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் காஞ்சனா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக, லெனோவா இயக்குநர் ஸ்ரீகாந்த், மனித வள மேம்பாட்டு துறை மேலாளர்கள் விஜயராஜன் அல்போன்ஸ், தனலட்சுமி, சிவ சுப்ரமணியன் மற்றும் டி.என்.எஸ் இணை இயக்குநர் கீர்த்தி சதுர்வேதி கலந்து கொண்டனர்.மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் ஐ.டி.ஐ., புதுச்சேரி மகளிர் ஐ.டி.ஐ., கல்லுாரியில் பயிலும் மாணவர்களும், துறை விரிவுரையாளர்களும், கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றனர்.கல்லுாரி வேலை வாய்ப்பு அதிகாரிகள் ராஜா கார்க்கி மற்றும் கஜேந்திரன் நன்றி கூறினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை டி.என்.எஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கருணாகரன், திலிப்குமார், கிருஷ்ண தேவன் மற்றும் சார்லஸ் மார்சல் பிரான்சிஸ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ