மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : ஜவகர் பால்பவன் கோடை வகுப்புகளில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்.புதுச்சேரி, ஜவகர் பால் பவன் சார்பில், ஆண்டுதோறும் சிறுவர், சிறுமிகளுக்கான கோடை கொண்டாட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் ஆறு முதல் 16 வயது வரை உள்ள புதுச்சேரி அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஓவியம், இசை, நடனம், நுாலகம், கித்தார், டிரம்ஸ், கீ போர்டு, தையல், வயலின், வீணை, மிருதங்கம் உள்ளிட்ட 11 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இந்தாண்டு அரசு பள்ளிகளின் விடுமுறை காலம் மே முதல் தேதி இருந்து துவங்கியதால், கோடை கொண்டாட்ட வகுப்புகள் நேற்று முதல் துவங்கி 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள தலைமை ஜவகர் பால்பவன், லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 29ம் தேதி முதல் வழங்கப்பட்டது. நேற்று காலை ஐந்து இடங்களில் சேர்க்கை நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் துவங்கியது. இதனால் பால்பவனில் பெற்றோர்கள் கூட்டம் அலை மோதியது.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago