| ADDED : ஜூலை 25, 2024 05:36 AM
புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி கல்வித் துறையின் கீழ், ராஜிவ் காந்தி விளையாட்டு பள்ளி இயங்கி வந்தது. தற்போது, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் இயக்குனரகத்தின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.இப்பள்ளியில், 110 மாணவர்கள் தங்கி, விளையாட்டுகளில் பயிற்சி பெறலாம். இவர்களுக்கு தனியாக ஹாஸ்டல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளியில் விளையாட்டுகளில் ஆர்வமிக்க பள்ளி மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.இவர்களுக்கான தேர்வு முகாம் அடுத்த மாதம் 1ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நான்கு பிராந்தியங்களில் நடக்க உள்ளது. வரும் 1ம் தேதி பாகூர் பாரதி அரசு மேனிலைப்பள்ளி, 8ம் தேதி மாகி ஜவகர்லால் நேரு அரசு மேனிலைப்பள்ளி, 13ம் தேதி புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் கருணாநிதி மேனிலைப்பள்ளி, 21ம் தேதி ஏனாம் ஒய்.எஸ்.ஆர்., விளையாட்டு அரங்கு, 27ம் தேதி காரைக்கால் விளையாட்டு அரங்கு, 30ம் தேதி புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலும் இதற்கான தேர்வு முகாம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி அனுமதியுடன் விளையாட்டு பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2357921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.