உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு அமலா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

காலாப்பட்டு அமலா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

புதுச்சேரி: காலாப்பட்டு அமலா ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றுள்ளது.10ம் வகுப்பு தேர்வில் மாணவி தர்ஷினி 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். பிளஸ் 2 பொதுத் தேர்வில், தர்ஷினி 547 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.அவர்களுக்கு பள்ளி தாளாளர் தேசநேசம், பள்ளி நிர்வாகி தாஸ் ஆகியோர், ஊக்கத் தொகையாக 10 ஆயிரம் ரூபாயை வழங்கி கவுரவித்தனர். பள்ளி முதல்வர் சப்தன், தலைமை ஆசிரியை தீபா மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவிகளை பாராட்டினர்.பள்ளி தாளாளர் கூறுகையில், 'வரும் 2024 - 25 கல்வியாண்டில், காலாப்பட்டு பகுதியில் வாழும் சிவப்பு நிற ரேஷன் அட்டை தாரர்களுக்கும், பெற்றோரை இழந்த மாணவர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு தமிழ் மாணவர்களுக்கும், ஆரம்ப கல்வி முதல் மேல்நிலை படிப்பு வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ