உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா பயணியிடம் லேப்டாப், மொபைல் திருட்டு கர்நாடகா வாலிபருக்கு வலை

சுற்றுலா பயணியிடம் லேப்டாப், மொபைல் திருட்டு கர்நாடகா வாலிபருக்கு வலை

புதுச்சேரி: முத்தியால்பேட்டை விடுதியில் தங்கிருந்த சுற்றுலா பயணிடம், லேப்டாப், மொபைல், பர்ஸ் உள்ளிட்டவைகளை திருடிய கர்நாடக மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரகாண்ட், ரிஷிகேஷ், சாய் வீகார் பகுதியை சேர்ந்தவர் முகமது தில்ஷாத்,28; கடந்த 25ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த இவர், முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 7:45 மணியளவில் முகமது தில்ஷாத் குளியல் அறைக்கு சென்றுவிட்டு, திரும்ப வந்து பார்த்தபோது, அறையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான லேப்டாப், மொபைல் மற்றும் ரூ. 7 ஆயிரம் பணத்துடன் பர்ஸ் உள்ளிட்டவை திருடு போயிருந்தது.புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விடுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதே விடுதியில் தங்கிருந்த கர்நாடகாவை சேர்ந்த குரு சவுத்ரி என்பவர், தில்ஷாத் அறையில் இருந்து பொருட்களை திருடி செல்வது தெரியவந்தது. அதன்பேரில், குரு சவுத்ரியை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை