உள்ளூர் செய்திகள்

கும்பாபி ேஷகம்

புதுச்சேரி: ஏம்பலம் அடுத்த ஆலமரத்துக்குப்பம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன், பரிமளரங்கநாதர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த 10ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, முதல் காலயாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 8:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, விமான கலசம் படிய வைத்தல், மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 10:00 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடந்தது. 11:00 மணிக்கு மகா தீபராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை