உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலி

திருக்கனுார் : லாரி மோதி நடந்து சென்ற கூலி தொழிலாளி இறந்தார்.திருக்கனுார்அடுத்த கூனிச்சம்பட்டு பிள்ளையார் கோவில் தெரு, அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர் சின்னப்பையன், 70; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை 5:00 மணி அளவில் வேலைக்கு சென்று விட்டு,வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, கூனிச்சம்பட்டு பகுதியில் இருந்து அதிவேக சென்றலாரி, நடந்து சென்ற சின்னப்பையன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர் சின்னப்பையன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் செட்டிப்பட்டை சேர்ந்த தமிழ் என்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி