உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா

ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா

புதுச்சேரி, : நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு லட்சதீப விழா நேற்று நடந்தது. விழா முன்னிட்டு, காலை 9:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து 108 பால்குட அபி ேஷகம் , மாலை 5:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், தீப அலங்கார பூஜை நடந்தது.நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் 36ம் ஆண்டு தீப ஒளி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 7.00 மணிக்கு கோவிலில் உள்ள ஆதி அந்த விநாயகர், செல்வ விநாயகர்,பாலமுருகன், மரகதவல்லி சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர், குரு தட்சிணாமூர்த்தி, கருடபகவான், கால பைரவர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு, தீபாரதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீப ஒளி ஏற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை