உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மொரட்டாண்டி நவகிரக கோவிலில் லட்சார்ச்சனை

மொரட்டாண்டி நவகிரக கோவிலில் லட்சார்ச்சனை

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோயில் உள்ள சொர்ண சிதம்பர மகா கணபதிக்கு லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், நவகிரக பரிகார சாமிகள் உள்ளன. இக்கோவிலில், சொர்ண சிதம்பர மகா கணபதிக்கு நேற்று காலை 6:00 மணிக்கு மகா சிறப்பு ேஹாமம் நடந்தது. அதனை தொடர்ந்து, சொர்ண கணபதிக்கு, பால் உள்ளிட்ட 9 வித திரவியங்களால் மகா அபிேஷகம் செய்யப்பட்டது.தொடர்ந்து, தீபாராதனை மற்றும் புஷ்பம், சதுர்வேத சமர்பனம் செய்து, 108 தேங்காய் உடைத்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரினசம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிதம்பர கீதாராம் குருக்கள், கீதா சங்கர குருக்கள் தலைமையில், அசோக் குருக்கள், சாமிநாத அய்யர், கீதாராம் அய்யர், ராஜாராம் அய்யர் அரிஹர அய்யர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை