உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை

பாகூர்: பிள்ளையார்குப்பம் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது. கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பிள்ளையார்குப்பத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் செடல் திருவிழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை 3.00 மணிக்கு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை