மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
6 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
6 hour(s) ago
புதுச்சேரி : பிரதமர் மோடி எந்த பணியை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வோம் என, அமைச்சர் சாய் சரவணன் குமார் தெரிவித்தார்.புதுச்சேரியில் என்.ஆர் காங்., - பா.ஜ., கூட்டணி சார்பில், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அமைச்சர்களை மாற்ற வேண்டும் என, பா.ஜ., மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி உயர்த்தி, டில்லியில் முகாமிட்டுள்ளனர். இது சம்மந்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும், திட்டமிட்டுள்ளனர். இதனால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இது குறித்து அமைச்சர் சாய் சரவணன் கூறியதாவது:பிரதமர் மோடி கொடுத்த பணியை தற்போது செய்து கொண்டிருக்கிறோம். பிரதமர் எந்த வேலை கொடுத்தாலும், சிறப்பாக செய்வோம். பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் டில்லியில் முகாமிட்டுள்ளது குறித்து கட்சியின் மாநிலத்தலைவரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். ரேஷன் அட்டை விவகாரத்தை பொருத்தவரை, சிவப்பு அட்டைகள் நீக்கப்படாது. தற்போதைய மக்கள் தொகை மற்றும் விநியோகிக்கப்பட்ட அட்டைகள் குறித்து, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது சம்மந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, முடிவெடுக்கப்படும். தீயணைப்புத்துறை பணியிடங்களில் வயது தளர்வு குறித்து கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறோம். அதிகாரிகளை டில்லிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அடுத்து வாரத்தில், முடிவு தெரியும், என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago