உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரெஸ்டோ பார் நள்ளிரவு 12:00 மணிக்கு பிறகு இயங்கினால் 3 மாதம் லைசென்ஸ் சஸ்பென்ட்

ரெஸ்டோ பார் நள்ளிரவு 12:00 மணிக்கு பிறகு இயங்கினால் 3 மாதம் லைசென்ஸ் சஸ்பென்ட்

புதுச்சேரி : ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12;00 மணி தாண்டி இயங்கினால் ரூ.1 லட்சம் அபராதம், 3 மாதம் லைசென்ஸ் சஸ்பென்ட் செய்யப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது.புதுச்சேரியில் 490க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், பார்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், என்.ஆர்.காங்., பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்றவுடன், புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 190 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நள்ளிரவு 12 மணியை தாண்டி இயங்கும் ரெஸ்டோ பார்களில் அருகில் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அவதி அடைந்து வருகிறது.இந்த நிலையில், மக்களுக்கு தொந்தரவாக உள்ள ரெஸ்டோ பார்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கலால் துறை சார்பில் 2 தனிப்படை அமைத்து நள்ளிரவு 12:00 மணியை தாண்டி ரெஸ்டோ பார்கள் இயங்குகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.கலால் துறை அதிகாரிகள் கூறுகையில்; ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12:00 மணியை தாண்டி இயங்கினால் ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது 3 மாதம் பார் லைசன்ஸ் ரத்து செய்யலாம் என்ற வழிகாட்டுதல் பார் லைசென்சில் உள்ளது. அதனால் நள்ளிரவு 12:00 மணியை தாண்டி ரெஸ்டோபார்கள் இயங்கினால் பார் லைசன்ஸ் சஸ்பென்ட் அல்லது அபராதம் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை