உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற மது பாட்டில்கள் பறிமுதல்

பாகூர் : தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற சுமார் 11 லிட்டர் கொண்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு கொம்மந்தான்மேடு பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது, வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும், அவர் வைத்திருந்த பையை கீழே போட்டு விட்டு தப்பி சென்றார். போலீசார் அந்தப் பையை சோதனை செய்த போது அதில் 5 லிட்டர் கொண்ட மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கலால் துறையிடம் ஒப்படைத்து, மது கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.இதேபோல், கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தில், சப் இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த பையை புதரில் வீசி விட்டு தப்பிச் சென்றார்.போலீசார் அதனை ஆய்வு செய்த போது, அதில் 6 லிட்டர் கொண்ட மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதனை கலால் துறையில் ஒப்படைத்து, தப்பியோடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி