உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். நேற்று காலை மடுகரை - பட்டம்பாக்கம் சாலையில் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.அவ்வழியாக ஸ்கூட்டியில் வந்த மடுகரை வி.எஸ்.நகரைச் சேர்ந்த பரமசிவம் 40, என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 16 ஆயிரம் மதிப்பிலான 91 லிட்டர் சாராயத்தை பாக்கெட் மற்றும் வாட்டர் பாட்டில்களில் அடைத்து, மடுகரையில் இருந்து தமிழக பகுதியான பட்டாம்பாக்கம் பகுதிக்கு ஸ்கூட்டியில் கடத்தி சென்றது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், சாராயத்தை பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ