உள்ளூர் செய்திகள்

கால்நடை கண்காட்சி

புதுச்சேரி,: புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மத்திய விலங்கு நல வாரியம் இணைந்து கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் கால்நடை கண்காட்சி முகாம் வில்லியனுார் உத்தரவாகின்பேட் அம்பேத்கர் திடல் நடந்தது. டாக்டர் செல்வமுத்து தலைமை தாங்கினார். முகாமினை கால்நடைத் துறை இணை இயக்குனர் குமாரவேல் துவக்கி வைத்தார். டாக்டர் தாமரை செல்வி சிறந்த கால்நடைகளை தேர்வு செய்தார். சிறப்பு விருந்தினராக, எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகள் மற்றும் கால்நடைகளுக்கான தாது உப்பு கலவை, சத்து மாவு, சத்து கரைசல்களை பயனாளிகளுக்கு வழங்கினார். முகாமில் 100 க்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஏற்பாடுகளை விலங்குகள் நல ஆர்வலர் ஆதித்தன், சிரஞ்சீவி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை