உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி டிரைவர் சாவு; போலீசார் விசாரணை

லாரி டிரைவர் சாவு; போலீசார் விசாரணை

பாகூர் : மணமேடு தென்பெண்ணையாற்று மேம்பாலத்தில் லாரி டிரைவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் விவேகானந்தர் தெரு அண்ணா நகரை சேர்ந்தவர் அருளநாதன் 54; லாரி டிரைவர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன், நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு லாரியில் கரும்பு லோடு ஏற்றி வந்தார்.பின், மணமேடு பகுதியில் உள்ள சாராயக் கடையில் மது குடித்து விட்டு சென்ற அவர், அங்குள்ள மேம்பாலத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பாகூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, அவரது உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ