உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மடுகரை அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் மடுகரை அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

நெட்டப்பாக்கம : மடுகரை வெங்கட சுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளியளவில், மாணவி நித்யா 552 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி பிரீத்தி 523 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவி ஹேமஸ்ரீ 517 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.பாட அளவில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 100, தமிழ் 96, ஆங்கிலம் 94, பயாலாஜி 90, வேதியியல் 92, கணக்கியல் 98, பொருளாதரவியல் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி துணை முதல்வர் சிவக்குமார், பள்ளி தலைமையாசிரியர் வசந்தி ஆகியோர் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் கூறுகையில், இந்த வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.

முதல் மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சி

முதலிடம் பிடித்த மாணவி கூறுகையில், நான் ஆரம்ப கல்வி முதல் அரசு பள்ளியில் பயின்று வருகிறேன். நாம் முதல் மதிப்பெண் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. எனக்கு ஆசிரியர் ஆக வேண்டும் என்பதே லட்சியம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்