உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

மடுகரை கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நேற்று காலை நடந்தது.துணை சபாநாயகர் ராஜவேலு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பின் ரத உற்சவம் மாட வீதிகள் சென்று கோவில் நிலைக்கு வந்தது. விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வடம் பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர். வரும் 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் மடுகரை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை