உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம் சார்பில், மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் உறுவையாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.சமுதாய நலவழி மையம் தலைமை மருத்துவ அதிகாரி திருமலை சங்கர் தலைமை தாங்கி, மலேரியா பரவும் விதம் அதனை தடுக்கும் முறைகள், அதற்கான மருத்துவம் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளக்கினார்.தலைமையாசிரியர் பொன்னுரங்கம் முன்னிலை வகித்தார். சுகாதார உதவி ஆய்வாளர் திருமலை வரவேற்றார். உருவையாறு துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி, தனலட்சுமி மலேரியா ஒழிப்பில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.தொடர்ந்து மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை சுகாதார உதவி ஆய்வாளர்கள் வெங்கடபதி, ஷாஜகான் வழி நடத்தினர். உருவையாறு முக்கிய சாலை வழியாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். சுகாதார உதவி ஆய்வாளர் வெங்கடபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்