உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம்

பாகூர்: பாகூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், குருவிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேலு கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். குருவிநத்தம் துணை சுகாதாரநிலைய மருத்துவர் எழிலரசி, முதுநிலை பயிற்சி மருத்துவர் நிவேதிதா, தலைமை ஆசிரியர் வாணி வரவேற்றார்.முன்னதாக, நடந்தமலேரியா விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவர்களுக்கு மலேரியா நோய்அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். ஊர்வலத்தில் மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களுக்கு மலேரியா விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு பணியாளர்கள் கார்த்திகேயன், முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்