உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரில் இறந்து கிடந்த ஆண் நபர் வில்லியனுார் போலீஸ் விசாரணை

காரில் இறந்து கிடந்த ஆண் நபர் வில்லியனுார் போலீஸ் விசாரணை

புதுச்சேரி: வில்லியனுாரில் காரில் அழுகிய நிலையில் மர்ம நபர் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வில்லியனுார் திருக்காமேஸ்வரர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கந்தசாமி, இவர் தனது பி.ஒய்.05.வி.4932 பதிவு எண் கொண்ட காரை வீட்டில் நிறுத்த இடமில்லாததால் அதே பகுதியில் உள்ள காலி மனை பகுதியில் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த வாரம் தனது காரை கந்தசாமி வழக்கம் போல் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் காரில் இருந்து துார்நாற்றம் வீசியது.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வில்லியனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு விரைந்து வந்த வில்லியனுார் போலீசார் காரை திறந்து பார்த்தனர். காருக்குள் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார்,எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்தும் , இறந்தவர் கொலை செய்யப்பட்டார என்பது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாருக்கு 0413-2665100 மற்றும் 9789424656 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி