உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 4 வயது சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

4 வயது சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 10 ஆண்டு சிறை

புதுச்சேரி : புதுச்சேரியில் 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு, போக்சோ விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.புதுச்சேரியை சேர்ந்த 4 வயது சிறுமியை, கடந்த 2015ம் ஆண்டு பிப்., மாதம் அருகில் உள்ள அங்கன்வாடியில் அவரது பெற்றோர் விட்டு சென்றனர். மாலையில் வீடு திரும்புவதற்காக சிறுமி காத்திருந்தார்.அப்போது, நெட்டப்பாக்கம் ஏரிப்பாக்கத்தை சேர்ந்த முதியவர் தாண்டவராயன், 79; சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதாக கூறி அழைத்து சென்றார். வழியில், வாழைத்தோப்பிற்கு சிறுமியை துாக்கி சென்று தாண்டவராயன் பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் விவசாய பணி செய்தவர்கள் ஓடி வந்து முதியவரை தாக்கி, சிறுமியை மீட்டனர்.இது தொடர்பாக பாகூர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து தாண்டவராயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.வழக்கு விசாரணை முடிந்து நேற்று, நீதிபதி சோபனா தேவி தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், தாண்டவராயனுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூ. 4 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ