உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொய்யாமொழி விநாயகருக்கு மண்டல அபிேஷக பூர்த்தி விழா

பொய்யாமொழி விநாயகருக்கு மண்டல அபிேஷக பூர்த்தி விழா

புதுச்சேரி: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வரும், 9ம் தேதி மண்டல அபிேஷக பூர்த்தி விழா நடக்கிறது.திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் வரும், 9ம் தேதி விநாயகருக்கு, 108 சங்காபிேஷகம் மற்றும் தட்சிணாமூர்த்தி, மகா ஜோதிர்லிங்கம், துர்கை நாகராஜர், நவக்கிரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மண்டல அபிேஷக பூர்த்தி விழா நடக்கிறது. விழா வரும் 8ம் தேதி மாலை 5:00 மணிக்கு மங்கல இசையுடன் துவங்குகிறது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, தச கலச ஸ்தாபனம், 108 சங்கு ஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடக்கிறது.மறுநாள் 9ம் தேதி, காலை 8:00 மணிக்கு, 108 சங்குக்கு விசேஷ பூஜை, திரவ்ய ேஹாமம் உள்ளிட்ட வழிபாடுகள் நடக்கின்றன. காலை 10:00 மணிக்கு, மகா அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகத்தை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து, 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை