உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் மாங்கனி விழா; 21ம் தேதி உள்ளூர் விடுமுறை: முதல்வர் ரங்கசாமி உத்தரவு 

காரைக்காலில் மாங்கனி விழா; 21ம் தேதி உள்ளூர் விடுமுறை: முதல்வர் ரங்கசாமி உத்தரவு 

புதுச்சேரி : மாங்கனி திருவிழாவையொட்டி, வரும் 21ம் தேதி, காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: ஆணடுதோறும் காரைக்காலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆண்டிற்கான திருவிழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என அமைச்சர் திருமுருகன், முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.அமைச்சரின் கோரிக்கை ஏற்று வரும் 21ம் தேதி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள், அலுவலகங்களுக்கு உள்ளூர் பொதுவிடுமுறை அளிக்க முதல்வர் ரங்கசாமி, காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ