மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி: தி.மு.க., வழங்கல்
8 hour(s) ago
ஹாஸ் பீனிக்ஸ் விருதுகள் வழங்கல்
8 hour(s) ago
சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் தரிசனம்
8 hour(s) ago
அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவைக் கூட்டம்
8 hour(s) ago
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் மரக்காணத்தைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.தமிழகத்தை உலுக்கியுள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நேற்று முன்தினம் கருணாபுரம் கண்ணுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமேதரன், சேஷசமுத்திரம் சின்னதுரை ஆகியோரை கைது செய்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் 14 பேரை பலி வாங்கிய மரக்காணம் கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடைய பிரபல சாராய வியாபாரி நரிப்பாளையம் முருகன் மகன் மதன், 27; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மரக்காணம் வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜாமினில் வந்தது, கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது.அதனையொட்டி கள்ளச்சாராயம் விற்ற மதன், ரங்கநாதபுரம் சக்கரவர்த்தி மனைவி சந்திரா, 32; விரியூர் லுார்துசாமி மகன் ரமேஷ், 40; சின்னப்பன் மகன் சூசைநாதன், 40; ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago