மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
9 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
10 hour(s) ago
புதுச்சேரி: இந்தோனேசியாவில் திருவள்ளுவர் சிலையை அமைச்சர் லட்சுமி நாராயணன் திறந்து வைத்தார்.பன்னாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து, உலக தமிழ்ச்சிறகம் என்ற அமைப்பை, பிரான்ஸ் நாட்டின் பாரீஸை தலைமையிடமாக கொண்டு கடந்த, 2003ம் ஆண்டு செப்டம்பரில் துவக்கினர்.இந்த அமைப்பானது, பல்வேறு நாடுகளில் வாழும் உலகத்தமிழர்களை ஒருங்கிணைத்தல்; பன்னாட்டு பல்கலைக்கழங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்குதல்; புதிய நுால்களை வெளியிடுதல்; பிறமொழி நுால்களை தமிழிலும், தமிழ் நுால்களை பிறமொழியிலும் மொழியாக்கம் செய்தல்; தமிழுக்காக உழைத்த மற்றவர்களை சிறப்பித்தல்; புதிய தொழில்நுட்பம் மூலம் தமிழை, புலம் பெயர்ந்து வாழும் இன்றைய தலைமுறையினருக்கு எளிதாக கற்பித்தல்; என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்தோனேசியா, சுமத்ரா மாநிலத்தில் உள்ள மேடான் நகரில், உலக தமிழ் சிறகத்தின், 2ம் ஆண்டு விழா, நடந்து வருகிறது. இதில், புதுச்சேரி சார்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் மேடான் நகரில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
9 hour(s) ago
10 hour(s) ago