மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பாஸ்கர் எம்.எல்.ஏ., பேசியதாவது; அரியாங்குப்பம் முதல் மரப்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடலுாரில் இருந்து புதுச்சேரி வர முக்கிய சாலை. இதற்கு நிரந்தர தீர்வு உண்டா.சம்பத் எம்.எல்.ஏ.,; உண்மையான விஷயம். நடவடிக்கை எடுங்கள். கடலுார் சாலையின் இரு பக்கமும் தலா 6 அடி தர வீட்டின் உரிமையாளர்கள் முன் வந்து அதற்கான கடிதம் கொடுத்துள்ளனர். நிதி ஒதுக்கினால் 2 மாதத்தில் விரிவாக்கம் செய்து விடலாம்.அமைச்சர் நமச்சிவாயம்: இதற்காக ரூ. 3.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பத் எம்.எல்.ஏ.; அது இரண்டு பக்கமும் ஏற்கனவே காலியாக உள்ள 2 அடி இடத்தில் சாலை அமைப்பதிற்கு. நான் கூறுவது வாய்க்காலுக்கு பின் பகுதியில் 6 அடி நிலம் தர தயராக உள்ளனர்.அமைச்சர் நமச்சிவாயம்: புதுச்சேரி முழுக்க இப்பிரச்னை உள்ளது. இரண்டு பக்கமும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காலை, மாலையில் போலீஸ் பாதுகாப்பும், போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுப்படுவர். 6 அடி விரிவாக்கம் செய்ய நில ஆர்ஜிதம் செய்து விரிவாக்கம் செய்யப்படும்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago