உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காணாமல் போன குழந்தை ஆற்றில் இறந்த நிலையில் மீட்பு

காணாமல் போன குழந்தை ஆற்றில் இறந்த நிலையில் மீட்பு

காரைக்கால் : காரைக்காலில் வீட்டு வாசலில் விளையாடிய குழந்தை ஆற்றில் இறந்த நிலையில் மீட்டனர்.காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பட்டினச்சேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் முருகேஷ். மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது ஒன்றரை வயது மகன் தக்க்ஷன் நேற்று காலை தனது பாட்டி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மாலை குழந்தை வீட்டின் பின்பக்கத்தில் உள்ள ஆற்றில் இறந்த நிலையில் மீட்டனர். குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை