உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓட்டுச்சாவடி மையத்தில் போன் எடுத்து செல்ல தடை

ஓட்டுச்சாவடி மையத்தில் போன் எடுத்து செல்ல தடை

புதுச்சேரி, : ஓட்டுச்சாவடி வளாகத்தில் மொபைல் போன்கள் பயன்படுத்த போலீசார் தடை விதித்தனர்.புதுச்சேரியில் காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஓட்டுப்பதிவு நடக்கும் ஓட்டுச்சாவடியில் மொபைல்போன்கள் பயன்படுத்த தேர்தல் துறை தடை விதித்தது.பொதுமக்கள் ஓட்டுச்சாவடி வளாகத்திலே மொபைல்போன் பயன்படுத்த கூடாது. மொபைல் போன்களை வீட்டில் வைத்து விட்டு வாருங்கள் எனவும் அல்லது அருகில் உள்ள நண்பர்களிடம் கொடுத்து விட்டு வாருங்கள் என தெரிவித்தனர்.சில ஓட்டுச்சாவடிகளில் மொபைல் போன்களை போலீசாரே வாங்கி வைத்து கொண்டு ஓட்டுப்போட்டு விட்டு வெளியே வந்தவர்களிடம் திருப்பி கொடுத்து அனுப்பினர். ஓட்டுச்சாவடி வளாகத்தில் போன் பேசிய நபர்களை போலீசார் வெளியே விரட்டினர்.

நீண்ட நேரம் காத்திருப்பு

சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு கால தாமதம் ஏற்பட்டது. அரியூர் கிராமத்தில் 1/4 எண் ஓட்டுச்சாவடியில் வாக்காளர்கள் 2 மணி நேரம் காத்திருந்து பிறகு தங்களின் ஓட்டை பதிவு செய்து சென்றனர். கை குழந்தையுடன் வந்த சில பெண்களை போலீசார் உள்ளே விட மறுத்ததால், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ