உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நாகலாந்து கவர்னர் தரிசனம்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நாகலாந்து கவர்னர் தரிசனம்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் நாகலாந்து கவர்னர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார்.இக்கோவிலுக்கு நாகலாந்து கவர்னர் இல கணேசன் குடும்பத்துடன் நேற்று வருகை தந்தார். அவரை துணை கலெக்டர் ஜான்சன் வரவேற்றார். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அருணகிரிநாதன் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.பின்னர், தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்த, கவர்னர் இல கணேசன் சனி பகவானுக்கு அபிேஷகத்திற்கு எண்ணெய் வழங்கி, சிறப்பு பூஜை செய்தார். 9 தீபங்கள் ஏற்றி காக்கைக்கு எள் சாதம் வழங்கி, சனி பகவானை தரிசனம் செய்தார். அப்போது கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், பா.ஜ., பிரமுகர் அருள்முருகன் உடனிந்தனர். முன்னதாக, திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கோ பூஜை, கஜ பூஜை செய்து கள்ள விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை