உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயர் பலகை திறப்பு விழா

பெயர் பலகை திறப்பு விழா

புதுச்சேரி: ஆதிக்குடி காட்டுநாயக்கன் பழங்குடியினர் மக்கள் நல இயக்கம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கிராமத்தில் வாழும் காட்டுநாயக்கன் சமூக மக்களின் நலத்திற்காக புதிதாக புதுச்சேரி ஆதிக்குடி காட்டுநாயக்கன் பழங்குடியினர் மக்கள் நல இயக்கம் அரசு பதிவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சங்க பெயர் பலகை திறப்பு விழா நடந்தது. சங்கத்தின் தலைவர் தனபால் தலைமை தாங்கினார்.பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராம்குமார், காட்டுநாயக்கன் நல சங்கத்தின் தலைவர்நாகராஜ் ஆகியோர், சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர்.கூட்டமைப்பின் துணை செயலாளர் ஏகாம்பரம் பழங்குடியினர் உரிமைகள் குறித்து பேசினார்.மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல், செயலாளர் புருஷோத்தமன், துணைச் செயலாளர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்