உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய மருத்துவ மாநாடு

வெங்கடேஸ்வரா கல்லுாரியில் தேசிய மருத்துவ மாநாடு

வில்லியனுார் : அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆராய்ச்சி மூலம் மருத்துவத்தை மாற்றுதல் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடந்தது.அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அங்கீகார தரவு மேலாண்மை அமைப்பு மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில், 'ஆராய்ச்சி மூலம் மருத்துவத்தை மாற்றுதல்- வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு நடந்தது.டில்லி ஆர்.எம்.எல். மருத்துவமனை டாக்டர் முத்துக்குமார், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அருண்குமார் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுரேஷ் ஆகியோர் பேசினார்.நிகழ்ச்சியில் டாக்டர் நிரஞ்சலி தேவராஜ், வெங்கடேஸ்வரா முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி, ஆராய்ச்சி துறை இயக்குனர் பாபாதாசரி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் லோகநாதன் சிறப்புரையாற்றினர்.மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர், உடற்பயிற்சி சிகிச்சை, பாராமெடிக்கல் மாணவர்கள், பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை டாக்டர் லதா மற்றும் டாக்டர் ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ