உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டில்லியில் குழாயில் இருந்து குடிநீர் திட்டம் தேசிய கருத்தரங்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பங்கேற்பு

டில்லியில் குழாயில் இருந்து குடிநீர் திட்டம் தேசிய கருத்தரங்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பங்கேற்பு

புதுச்சேரி: டில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் 'குழாயில் இருந்து குடிநீர்' என்ற பொருண்மையின் கீழ் ஒருநாள் தேசியக் கருத்தரங்கு நேற்று நடந்தது.இதில், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 350 பேர் பங்குபெற்றனர். புதுச்சேரி சார்பில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் டாக்டர் தீனதயாளன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, திட்டம் மற்றும் எ.எப்.டி செயற்பொறியாளர் சுந்தரமூர்த்தி, காரைக்கால் பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தியாவில் உள்ள 375 நகரங்களில் குழாயிலிருந்து குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்கில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகரும், புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளருமான டாக்டர் தீனதாளன் தலைமையின் கீழ் வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகள் கையேடுவெளியிடப்பட்டது.இனி வரும் காலங்களில் அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய குடிநீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகள் கையேட்டின் வழிகாட்டுதல்களின் படியே குழாயிலிருந்து குடிநீர் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட உள்ளது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் குழாயிலிருந்து குடிநீர் திட்டம் தொடர்பான தங்களின் சிறந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ