உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நவதுர்கா பள்ளி சாதனை

நவதுர்கா பள்ளி சாதனை

புதுச்சேரி திருவாண்டார்கோவில் நவதுர்கா ஆங்கில மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 58 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் சண்முகவேல் 492 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி லாவண்யா 487 இரண்டாமிடம், மாணவிகள் சிந்துஜா, மதுமிதா தலா 484 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.450க்கு மேல் 23 பேர், 400 க்கு மேல் 34 பேர் மதிப்பெண்கள் எடுத்தனர். கணிதத்தில் 4 பேர், அறிவியல் பாடத்தில் 2 பேரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். தமிழ், ஆங்கிலத்தில் தலா ஒருவர், சமூக அறிவியல் பாடத்தில் 4 பேரும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.அவர்களை பள்ளி கல்வி குழு தலைவர் சத்யா நடராஜன், துணை முதல்வர் விவேக் நடராஜன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். கல்விக்குழு தலைவர் சத்யா நடராஜன் கூறுகையில், 'பள்ளியில் தொடர் வெற்றிக்கு பாடுப்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்களுக்கு நன்றி' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை