உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை

தாத்தா, பாட்டியை தாக்கிய பேரனுக்கு வலை

பண்ருட்டி,: சொத்து தகராறில் தாத்தா,பாட்டியை தாக்கிய பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை வி.பிள்ளைபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்,90; இவரது மனைவி தனலட்சுமி,80; இருவரும், வேகாக்கொல்லை சக்கரவர்த்தி என்பவரின் முந்திரி தோப்பில் காவலாளியாக வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அவர்களது மகன் வழி பேரன் பரணிதரன், வீட்டு மனையை பிரத்து தரக் கேட்டு இருவரையும் தாக்கினார். அதில் காயமடைந்த இருவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, பரணிதரனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ