உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வட மாநில தொழிலாளர் மர்ம சாவு

வட மாநில தொழிலாளர் மர்ம சாவு

காரைக்கால் : காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரான் பகுதியை சேர்ந்த ரமண்ட்யா மான்சி, 47, என்பவர், தொழிற்சாலையில் தங்கி வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு தங்கும் அறைக்கு சென்று துாங்க சென்றவர் பேச்சு மூச்சின்றி மயங்கி கிடந்தார். அவரை, சக ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில், திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ