உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருபுவனை தொகுதியில் என்.ஆர்.காங்., ஆலோசனை

திருபுவனை தொகுதியில் என்.ஆர்.காங்., ஆலோசனை

புதுச்சேரி : மதகடிப்பட்டு பகுதியில், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஓட்டு சேகரிக்க நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், 18 கிராமங்களை சேர்ந்த, என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.புதுச்சேரி லோக்சபா தொகுதியில், தே.ஜ கூட்டணி சார்பில் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓட்டு சேகரிப்பது தொடர்பாக, திருபுவனை சட்டசபை தொகுதி என்.ஆர்.காங்., சார்பில், மதகடிப்பட்டு பகுதியில், ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.இதில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திருபுவனை, மதகடிப்பட்டு, செல்லிப்பட்டு, குச்சிப்பாளையம், ஆண்டியார் பாளையம் உள்ளிட்ட, 18 கிராமங்களை சேர்ந்த, என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பங்கேற்று, கருத்துகளை முன் வைத்தனர்.இதைத்தொடர்ந்து, தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வரும் முதல்வர் ரங்கசாமி மற்றும் வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு, சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், தொகுதியில் அதிக ஓட்டுகள் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ