உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி: புதுச்சேரி வரலாற்று சங்கம் சார்பில், சிறப்பு சொற்பொழிவு மற்றும் நுால் வெளியீட்டு விழா நடந்தது.புதுச்சேரி நல்லாம் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்த விழாவில், வரலாற்று சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மரியன்னா தயாவதி வரவேற்றார்.புதுச்சேரி அருங்காட்சியகத்தின் நிறுவனர் அறிவன், புதுச்சேரி வரலாற்று சங்கம், ஒரு தொடக்கப் பார்வை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தொடர்ந்து, தமிழ்த்துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆரோக்கியநாதன் எழுதிய பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி என்ற நுால் வெளி யீட்டு விழா நடந்தது. டாக்டர் நல்லாம் நுாலை வெளியிட்டார். பேராசிரியர் ராமதாஸ் பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில், தாவரவியல் துறைத்தலைவர் ராமானுஜம், கஸ்பார் முத்தப்பா உட்பட பலர் கலந்து கொண் டனர். சங்க பொருளாளர் கோபிராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ