உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

பாகூர் : மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம், காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சாந்தா 60; சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த ஆண்டு அதிக துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.சாந்தா கடந்த 1ம் தேதி இரவு புடவையால் வீட்டின் கூரையில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஜிப்மரில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை