உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முன்னாள் காங்., முதல்வர்கள் மக்களை பீதியாக்க வேண்டாம் ஓம் சக்தி சேகர் கண்டனம்

முன்னாள் காங்., முதல்வர்கள் மக்களை பீதியாக்க வேண்டாம் ஓம் சக்தி சேகர் கண்டனம்

புதுச்சேரி: 'முன்னாள் முதல்வர்கள் மக்களை பீதி அடைய செய்யும் வகையில் பேசுவது அழகல்ல' என, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:நீண்ட அரசியல் அனுபவம், எம்.எல்.ஏ., எம்.பி., உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த முன்னாள் காங்., முதல்வர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம் பேசி வருவது கண்டனத்திற்குரியது.குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர், தெளிவாக 'அரசுக்கு எதிரான வழக்கு அல்ல. தன்னையும் ஒரு வாதியாக சேர்த்து வழக்கை முடிக்க போட்ட மனு' என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.இந்நிலையில் அரசுக்கு எதிராக அமைச்சர் மனுதாக்கல் செய்துள்ளார் என, பேசுவது, மாநில முதல்வர் பதவி வகித்த நாராயணசாமிக்கு அழகல்ல. தே.ஜ., கூட்டணி அரசை நாங்கள் கவிழ்க்க மாட்டோம் என்று பேசி வருவது தன்னைத் தானே ஏமாற்றி, மக்களை பீதி அடைய செய்யும் செயல்.ராஜிவ் சிக்னல் அருகில் மேம்பாலம் அமைக்கப்படாது என, மத்திய அமைச்சர் அறிவிக்காத சூழலில், அவர் சூசகமாக பதில் அளித்ததாக தெரிவிப்பது முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் எம்.பி.,க்கு ஏற்றத்தக்க செயல் அல்ல. இது போன்ற செய்திகளை வெளியிடாமல் முன்னாள் காங்., முதல்வர்கள் தங்கள் பதவிக்கான அழகை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை